போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிகா அகர்வால் என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் உள்ளது. போராட்டத்தின் மூலமாகவும் நாடாளுமன்ற விவாதம் மூலமாகவும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். ஆனால் போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்றும், எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…