இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி.! 6 முறை விலை உயர்ந்த சிலிண்டர் விலை இன்று ரூ.55 குறைவு..!

Default Image

தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை விலை உயர்ந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் ரூ.714 ஆகவும் , ஜனவரியில் மீண்டும் அதிகரித்தது ரூ.734 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.இதையெடுத்து கடந்த 12-ம் தேதி மீண்டும் அதிரடியாக சிலிண்டரின் விலை ரூ.147 உயர்ந்து. ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தபோது , சர்வதேச சந்தைகளின் விலை ஏற்றத்தால் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. வருகின்ற மாதங்களில் விலை குறையும் என கூறினார். இதையெடுத்து இன்று மார்ச் 1-ம் தேதி நாட்டின் மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனால் இன்று சென்னையில் ரூ.826 ,டெல்லியில் ரூ.805.50 , கொல்கத்தாவில் ரூ.839, மும்பையில் ரூ.776.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்