வீடு இடிந்து விழுந்து விபத்து..! ஒருவர் பலி, 3 பேர் மீட்பு..!
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமத்தில் உள்ள ஹெலாங்கில் வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதன்பிறகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.
பின், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) தெரிவித்துள்ளது.