காஷ்மீர் விவகாரம்.! மெகபூபா முப்தி வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு.!
மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
மேற்கண்ட மூவர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
மெகபூபா முப்தி மட்டும் விடுவிக்கப்படாமல் இருந்துவந்தார். இந்நிலையில் மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.