நீங்கள் காஷ்மீரை சேர்ந்தவரா? இந்த ஓட்டலில் உங்களுக்கு 370 ருபாய் அதிரடி தள்ளுபடி!
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் டெல்லி ஹோட்டலில் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கபடுகிறது. இந்த சலுகைக்காக காஷ்மீர் மக்கள் தங்களுக்கான ஏதேனும் அரசாங்க அடையாள அட்டை காண்பித்தால் போதும்,
இந்த டெல்லி ஹோட்டலின் பெயர் ஆர்டோர் 2.O. இங்குதான் ‘ஆர்ட்டிகல் 370 எனும் தாளி’ வகை உணவு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,370 ( சைவம்), ரூ.2669 (அசைவம்). இங்கு காஷ்மீர் மக்களுக்கு மட்டும் 370 தள்ளுபடி செய்து உள்ளது.
மேலும் மற்ற வாடிக்கையார்களிடம் பெரும் பணத்தில் 170 ருபாய் காஷ்மீர் மக்களுக்கு நிவாரண தொகைக்காக வழங்கப்படுகிறது. என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.