கடும் வெயில்.. பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Default Image

கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில்,பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் வெயிலால் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், நடை வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பணிநேரத்தை மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், பணியிடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய மாநில அரசு கண்காணிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள்  உள்ள இடங்களில் அவசர கால ஐஸ் பெட்டிகள், வெப்ப நோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவும், இதுபோன்று சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்