போலீசாரின் நிர்பந்தத்தால் நிர்வாணமாக நடனமாடிய ஹாஸ்டல் பெண்கள்.!
போலீசாரின் நிர்பந்தத்தால் நிர்வாணமாக நடனமாடிய ஹாஸ்டல் பெண்கள் விவகாரம் குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ ஸ்வேதா மஹாலே எழுப்பிய விவகாரம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் பகுதியில் அரசாங்கம் நடத்தி வரும் விடுதியில் உள்ள பெண்களை படப்பிடிப்பின் போது போலீசார் மற்றும் சில ஆண்கள் இணைந்து நிர்வாணமாக நடனமாட வைத்துள்ளனர் .இந்த விவாகரத்தை சட்டமன்றத்தில் எழுப்பிய போது இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதுடன் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்துமாறும் , இரண்டே நாட்களில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜல்கான் விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.அதில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும்,ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே அங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இருந்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.