மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ்.!

Advani discharged

டெல்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின், இன்று அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அத்வானியின் அலுவல் மருத்துவர் டாக்டர் சஞ்சய் லால்வானி, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி, நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இருந்தாலும், அவருக்கு எதனால்  உடல்நிலை சரி இல்லாமல் போனது என்றும், என்ன சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, அவர் முதியோர் பிரிவில் இருந்ததாகவும், அங்கு அவருக்கு சிறுநீரகவியல் துறையைச் சார்ந்த  மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack
mayonnaise
Rajnath Singh terrorist attack
pat cummins about srh
PahalgamTerroristAttack pm modi
SRH vs MI - IPL 2025