இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட உயிரிழக்காத மருத்துவமனை….!
நியூ ஜிஜாமாதா மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி (பி.சி.எம்.சி) ஒய்.சி.எம் மருத்துவமனை, ஜம்போ மருத்துவமனை, ஆட்டோ கிளஸ்டர் கோவிட் மருத்துவமனை, புதிய போசாரி மருத்துவமனை மற்றும் புதிய ஜிஜாமாதா மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் நியூ ஜிஜாமாதா மருத்துவமனையில் 1,800 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ”என்று கோவிட் -19 நோயாளிகளைக் கையாளும் மூத்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பாலாசாகேப் ஹோட்கர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், லேசான அல்லது மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் மரணங்கள் ஏற்படவில்லை என்றும், ஒரு கொரோனா நோயாளியை எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, அவர் ஆரம்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அவரது அறிகுறிகள் லேசானவை அல்லது மிதமானவை என்றால், நாங்கள் அவரை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால், அவரது அறிகுறிகள் கடுமையானவை அல்லது நிலைமை தீவிரமாக இருந்தால், ஒய்.சி.எம்.எச் அல்லது ஜம்போ மருத்துவமனை போன்றவற்றில் அனுமதிக்க நாங்கள் அறிவுறுத்துகிறோம், ”என்று அவர் கூறினார். ஜிஜாமாதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலை மோசமாக காணப்பட்டால், உடனடியாக மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.
மருத்துவர் டாக்டர் ரூபேஷ் டால்வி கூறுகையில், “நோயாளியை நிர்வகிக்க முடிந்தால் மட்டுமே நாங்கள் அவரை அனுமதிக்கிறோம். எங்களிடம் கொண்டு வரும்போது நோயாளி மோசமான நிலையில் இருந்தால், மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.