பணம் கொடுக்காததால் முதியவரை கட்டி வைத்த மருத்துவமனை நிர்வாகம் .!

தனியார் மருத்துவமனையில் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த அவலம்.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த முதியவருக்கு மருத்துவக் கட்டணமாக ரூ,11,000 செலுத்தவேண்டிய இருந்த நிலையில் முன்னதாக 5,000 கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தங்களால் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.
இதனால், மருத்துவ நிர்வாகம் அந்த முதியவரின் கை, கால்களை கட்டி வெளியசெல்லாதவறு வைத்துள்ளதாக அந்த முதியவரின் மகள் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவதை அம்மாநில முதல்வர் சிவராஜசிங் சவுகான் கவனத்தில் கொண்டு சென்றதால் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.