கோரவிபத்து..பள்ளத்தில் கவிழ்ந்த கார்..! 9 பேர் பலி..!

car falls into ditch

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட்: பித்தோராகர் மாவட்டம் முன்சியாரி தொகுதியின் பாகேஷ்வரில் உள்ள சாமாவில் இருந்து ஹோக்ரா கோயிலுக்குச் சென்ற கார் (ஜீப்) சாலையில் இருந்து கவிழ்ந்து ராமகங்கா ஆற்றில் விழுந்துள்ளது. இதில் விபத்தில் வாகனத்தில் இருந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புக் குழுவினருடன் இணைந்து கிராம மக்கள் அனைவரும் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 600 மீட்டருக்கும் அதிக ஆழமான பள்ளத்தாக்கில் கார் விழுந்துள்ளது. பள்ளத்தின் நடுவே இறந்தவர்களின் சடலங்கள் தெரிகின்றன. நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்