கோர விபத்து…நேருக்கு நேர் மோதிய கார் – டேங்கர் லாரி .! 3 பேர் பலி.!
கார் – டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற கார் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பிய கார் ஒன்று தர்மபுரம் என்ற பகுதியில் டேங்கர் லாரி ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார் முழுவதுமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் டேங்கர் லாரி ஓட்டுநர் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.