Lesbian Couple : ஓரினசேர்க்கை தம்பதிகள் விருப்பப்படி வாழலாம்.. தொந்தரவு செய்ய வேண்டாம்.! உயர்நீதிமன்றம் கருத்து.!
டெல்லியை சேர்ந்த 22வயது பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது தான், தனது விருப்பப்படி ஓரினசேர்கையாளர் ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும், அதனால், தனது பெற்றோர்களால் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அந்த பெண்ணிற்கு 22 வயது ஆகிறது. அவர் தற்போது தன்னிச்சையாக முடிவெடுத்து விருப்பப்படி வாழ தகுதி பெற்றுவிட்டார். இதனால் அவரை பெற்றோர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களை அச்சுறுத்தக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.
இந்த ஓரினசேர்கையாளர் குறித்து பெற்றோர்களுக்கு உரிய மன ஆலோசனை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு அந்த பெண் தான், ஓரினசேர்க்கை குறித்து பேசியதாகவும், இருந்தும் குடும்பத்தார் அதனை ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து அந்த இளம் பெண் பாதுக்காப்பாக, எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழவிட வேண்டும் என்றும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது . இதனை அடுத்து, அந்த பெண்ணின் உடமைகளை காவல்துறை வசம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர்.