வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி – கெஜ்ரிவால் அறிவிப்பு..!
- டெல்லியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
- 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து (ஜூன் 7) இன்று தளர்வுகளை அறிவித்தார்.
மேலும், டெல்லியில் இருக்கும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருவதில்லை. இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தடுப்பூசி பணியை மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பணி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த வதந்தியை போக்கும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.