உள்துறை செயலாளர் அஜய் பல்லா பதவிக்காலம் நீட்டிப்பு..!

Default Image

மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய உள்துறை செயலாளராக பல்லா நியமிக்கப்பட்டார். அப்போது, வரும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான அஜய் குமார் பல்லா, மத்திய எரிசக்தித் துறை செயலராகவும், பின்னர் உள்துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi