உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார்.
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை, நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மிசோரம்- அசாம் இடையிலான எல்லை பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…