இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும் தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறிய அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த ஒரு பிரதமர் மீதும் நான் வசை பாடியது கிடையாது, அவதூறான வார்த்தைகளில் பேசியதும் கிடையாது என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் அதிகரித்தே காணப்பட்டது.அண்மையில் பிரதமர் மோடி மீது முண்ணனி தேசிய கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த விரும்பத்தகாத சொற்களில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற ஜனநாயக அடையாளங்களை அரசியல் கட்சிகள் அழித்துவிடக்கூடாது என்றும் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…