ஜனநாயக அடையாளங்களை எதிர்கட்சியினர் தயவுசெய்து அழித்துவிடாதீர்கள்….. மக்கள் பிரதிநிதிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்…. உள்துறை அமைச்சர் கரார்…..

Default Image

இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து  பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய  அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும்  தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image result for RAJNATH

மேலும் கூறிய அவர்  எந்த  கட்சியை சேர்ந்தவராக  இருந்தாலும் எந்த ஒரு பிரதமர் மீதும் நான்  வசை பாடியது கிடையாது, அவதூறான வார்த்தைகளில் பேசியதும் கிடையாது  என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் அதிகரித்தே காணப்பட்டது.அண்மையில் பிரதமர் மோடி மீது  முண்ணனி தேசிய கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த விரும்பத்தகாத  சொற்களில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related image

இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற ஜனநாயக அடையாளங்களை  அரசியல் கட்சிகள்  அழித்துவிடக்கூடாது என்றும் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்