காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானுடன் விளையாட்டு மற்றும் அனைத்து தொடர்பையும் இந்தியா துண்டிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையடும் போட்டியில் இந்தியஅணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இது குறித்து BCCI அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம் என்று தெரிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிக்கையில் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட மற்றும் வர்த்தக தொடர்பு என எதற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் BCCI தீவிரவாத நாடுகளுடன் இருக்கும் கிரிக்கெட் தொடர்பை துண்டிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…