தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது தீவிரவாதத்தை விட பயங்கரமானது.! உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம்.!

Default Image

மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை விட, பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை.

இன்று டெல்லில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதம் குறித்த தனது எதிர்ப்பை பலமாக பதிவு செய்தார்.

அவர் பேசுகையில், மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை விட, பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. இந்தியா 10 ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுதலை எதிர்கொண்டு வருகிறது. அதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

தீவிரவாதிகள், டார்க் வெப், கிரிப்டோகரன்சி ஆகியவை பயன்படுத்தி , இளைஞர்களை தவறான பாதைக்கு திசை திருப்பி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தீவிரவாதம் வெவ்வேறு வடிவங்களில் வருகிறது எனவும் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்