இந்திய எல்லையில் ஊடுருவ திட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை!
உளவுத்துறை தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு நிலவரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை.
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய எல்லையில் ஊடுருவல்களை அதிகரிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகள் இந்திய எல்லையில் ஊடுருவலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவலை தொடர்ந்து, ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.