உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவ சங்கத்துடன் ஆலோசனை
இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார் .
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்கள்
தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.பணிபுரியும் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.இதனால் இன்று நாடு முழுவதும் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார் .அப்பொழுது அவர் பேசுகையில்,மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும், மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.