யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

Union minister Amit shah

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர்.

மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆளும், I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் 42 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இன்று மால்டா தெற்கு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளும் மாநில அரசான திரிணாமுல் காங்கிரஸ் மீது கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறது. அதன் மூலம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை அக்கட்சி தடுக்க நினைக்கிறது என்று கூறினார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் தான் மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய எல்லையில் அதிகமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவுகிறார்கள் என குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் ஊழலையும், ஊடுருவளையும் நிறுத்த பாஜகவுக்கு வாக்களிக்க அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய நாட்டின் எல்லைகளை மாநில அரசுகள் பாதுகாத்த வந்த நிலையில், கடந்த 1965ஆம் ஆண்டு முதலே அது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அப்போது இருந்து இப்போது வரையில், எல்லை பாதுகாப்பு படை எனும் BSF (Border Security Force) வீரர்கள் தான் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றனர். இந்த எல்லை பாதுகாப்பு படையானது மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், இந்திய எல்லையில் ஊடுருவல் என அமித்ஷா பேசியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்