மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்.!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா அனுமதிக்கபட்ட நிலையில், முழு மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் அறிவுரையின்படி வீட்டில் ஒய்வுவெடுப்பர்.