ஊழல் குற்றச்சாட்டில் ஹோம் கார்ட் அதிகாரி பதவி நீக்கம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
ஊழல் குற்றச்சாட்டில் ஹோம் கார்ட் அதிகாரியை பதவி நீக்கம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஊழல் குற்றச்சாட்டில் ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதியை பதவி நீக்கம் செய்ய கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹோம்கார்ட்ஸ் துறையின் மாவட்ட தளபதி முகேஷ் குமார், புலந்த்ஷாரில் பதவியேற்றபோது ஊழலில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை அறிக்கையின் படி, குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மேலும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விரிவான விசாரணை அறிக்கை லக்னோவின் மத்திய பயிற்சி நிறுவனத்தின் துணை கமாண்டன்ட் ஜெனரல் விவேக் குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
மேலும், இந்த அறிக்கையில் குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத், முகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.