கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.
இந்தியாவில் தற்போது 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா காரணமாக முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,பின் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அவதிப்பட்டனர்.எனவே அரசு சார்பில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஏற்பாடு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதாவது ,குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஆகிய மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதியே ,அவர்களின் வீடு தேடி ஏடிஎம்கள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…