‘ஹோலிகான் தஹான்’- டெல்லியில் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு கொளுத்திய விவசாயிகள்..!
நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.
பல இடங்களில் கொரோனா பரவல் காரணமாக கோலி பண்டிகை சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று ‘ஹோலிகான் தஹான்’ என்ற பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் வழக்கம் என்னவென்றால், ஹோலி பண்டிகையின் போது அதில் தேவையில்லாதவற்றை தீயிட்டு எரிப்பது ஆகும்.
இந்த முறை ஹோலிகா என்ற அரக்கியை எரிப்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளதாக, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
On #HolikaDahan,Farmers in Rajasthan #BurnFarmLawsOnHoli and sung slogans for 300+ who have died in #FarmersProtest.pic.twitter.com/ZHsquYFTac
— Kanav Bawa (K.V) (@kanav_bawa) March 28, 2021