டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சில மாதங்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ம் தேதி போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
இதனால் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால் நேற்று கடைகள் , சில நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மேலும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வாகனங்கள் சாலைகளில் காணப்பட்டன.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லத் தொடங்கினர். இந்நிலையில் வன்முறை நடந்த வடகிழக்கு டெல்லியில் மார்ச் 7-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…