டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, டெல்லியில் காற்று மாசு காரணமாக நவம்பர் 11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நாளை (9 ம் தேதி) முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை, முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் நவம்பர் 13 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசு தடுப்பு விதியை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது. வாகன பயன்பாட்டை குறைக்க 50 சதவீத பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…