மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை..!
கேரளாவில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான 4000த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், மாதவிடாய் காலங்களுக்கு ஒவ்வொரு செமஸ்டரிலும் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு செமஸ்டருக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே அவர்கள் தேர்வு எழுத முடியும் என இருந்த நிலையில், தற்போது வருகைப்பதிவு 73% மாக குறைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.