மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..!
ஜனவரி 22 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha) வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..!
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழா அன்று(ஜனவரி 22 ஆம் தேதி )நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் , மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
அதன்படி வரும் 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.