டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என என்று டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் அவர் கூறினார். டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு சுகாதார அடிப்படையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10-ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, டெல்லியின் ஷாதிபூர் பகுதியில் உள்ள மக்கள் அதிகபட்ச மாசுபாட்டை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காற்றின் தர அளவு மோசமாக உள்ளது. டெல்லி குதுப்மினார் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெற்கு டெல்லி பகுதியில் மூடி படர்ந்த புகை மூட்டம் போல காட்சியளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…