ஹோலி பண்டிகை – புதுச்சேரி ஜிப்மர்-க்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர்-க்கு நாளை (08.03.2023) விடுமுறை அறிவிப்பு.
ஹோலி பண்டிகை என்பது, குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இரண்டு நாட்கள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர்-க்கு நாளை (08.03.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநோயாளிகள் பிரிவும் இயங்காது எனவும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.