ஹோலி கொண்டாட்டங்களில் நடனமாடிய நபர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயதான கோபால் சோலன்கி என்பவர் மகிழ்ச்சியில் தனது நண்பர்களுடன் நடனம் ஆடி கொண்டிருந்தார். நடனமாடி கொண்டிருந்த நபர் தன் கையில் கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு வீசி கொண்டிருந்தார்.
நண்பர்களுடன் மது போதையில் மிகத் தீவிரமாக நடனமாடி கொண்டிக்கும் போது, திடீரென உணர்ச்சிவசப்பட்ட கோபால், தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது இதயத்தின் மீது குத்திக் கொண்டார். ஆர்வத்தில் கத்தியால் குத்திக் கொண்ட போதும், அவர் கையில் இருந்த கத்தி இதயத்தை பதம் பார்த்தது.
கத்தியால் குத்திக் கொண்டது தெரியாமல் நடனமாடி வந்த கோபாலின் உடலில் இரண்டு முறை பலமாக கத்தி இறங்கியதை அடுத்து, சில நொடிகளிலேயே இரத்தம் வெளியேறிய நிலையில், கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள், கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கைகளில் கத்தியுடன் தனது நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்த கோபால் சோலங்கி, ஸ்டண்ட் செய்ய முயன்றபோது தவறுதலாக தன்னைத்தானே குத்திக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அதிக அளவில் குடிபோதையில் கோபால் தனது நண்பர்களுடன் நடனமாடுவதைக் காட்டுகிறது. அப்போது, நண்பர்களுடன் தன்னை மறந்து நடனமாடிய கோபால் கத்தியால் நான்கு முறை குத்திகொண்டுள்ளார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…