நாடு முழுவதும் இன்று வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது ஹோலிப் பண்டிகை.ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தையே உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக இரணியனின் தூண்டுதலால் ஹோலிகா என்ற அரக்கி ஏவப்படுகிறாள். அடுத்தவருக்கு துன்பம் அளிக்கக் கூடாது என்றுதான் பிரம்மா ஹோலிகாவுக்கு பெரும் சக்திகளை அளித்திருந்தார்.
பிரகலாதனை மடியில் அமர்த்தி ஹோலிகா தீயில் இறங்க முயன்றாள். ஆனால் ஹோலிகா தர்மத்ததை மறந்ததால் திருமால் ஹோலிகாவின் ஆடையில் இருந்த அவளது சக்திகளை வேகமான காற்றால் அபகரித்து, பிரகலாதன் மீது போர்வையாய் போர்த்தி தீயில் இருந்து தடுத்தாட்கொண்டார். ஹோலிகா தீயில் கருகிப் போனாள். இதனையொட்டி ஹோலிப் பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
ஒருவாரம் முன்பே இதற்கான ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கி விட்டன. ஹோலியை முன்னிட்டு ஹோலிகா தகன நிகழ்ச்சி, டெல்லி, மும்பை, வாரணாசி, துவாரகா, பாட்னா, நாக்புர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
மும்பையில் உள்ள வொர்லியில் சிலர் ஹோலிகா சிலைக்கு பதில், 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை ஏப்பம் விட்ட நீரவ் மோடியை ஹோலிகாவாக சித்தரித்து, எரித்தனர்.
இன்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டு, ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள், மலர்களைத் தூவியும், வண்ண நீரைப் பாய்ச்சியும் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போன்று பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்திலும் ஹோலி கொண்டாடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…