வண்ணமயமாக ஹோலிப்(holi) பண்டிகை நாடு முழுவதும் கோலாகலம்!

Default Image

நாடு முழுவதும் இன்று வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை  கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது ஹோலிப் பண்டிகை.ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தையே உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக இரணியனின் தூண்டுதலால் ஹோலிகா என்ற அரக்கி ஏவப்படுகிறாள். அடுத்தவருக்கு துன்பம் அளிக்கக் கூடாது என்றுதான் பிரம்மா ஹோலிகாவுக்கு பெரும் சக்திகளை அளித்திருந்தார்.

பிரகலாதனை மடியில் அமர்த்தி ஹோலிகா தீயில் இறங்க முயன்றாள். ஆனால் ஹோலிகா தர்மத்ததை மறந்ததால் திருமால் ஹோலிகாவின் ஆடையில் இருந்த அவளது சக்திகளை வேகமான காற்றால் அபகரித்து, பிரகலாதன் மீது போர்வையாய் போர்த்தி தீயில் இருந்து தடுத்தாட்கொண்டார். ஹோலிகா தீயில் கருகிப் போனாள். இதனையொட்டி ஹோலிப் பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

ஒருவாரம் முன்பே இதற்கான ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கி விட்டன. ஹோலியை முன்னிட்டு ஹோலிகா தகன நிகழ்ச்சி, டெல்லி, மும்பை, வாரணாசி, துவாரகா, பாட்னா, நாக்புர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

மும்பையில் உள்ள வொர்லியில் சிலர் ஹோலிகா சிலைக்கு பதில், 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை ஏப்பம் விட்ட நீரவ் மோடியை ஹோலிகாவாக சித்தரித்து, எரித்தனர்.

இன்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டு, ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள், மலர்களைத் தூவியும், வண்ண நீரைப் பாய்ச்சியும் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இதே போன்று பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்திலும் ஹோலி கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்