இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியா ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹாட்ரிக் கோலை வந்தனா அடித்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் பெண் இந்திய வீராங்கனை வந்தனா தான்.
எனவே, வந்தனாவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கி கவுரவித்து இருந்தார். மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் மகள் வந்தனா டோக்கியோவில் நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் மறக்க முடியாத பங்களிப்பு செய்தவர் எனவும், வந்தனாவை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் எனவும் கூறியிருந்தார்.
தற்பொழுதும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக வந்தனா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். வந்தனாவின் சாதனைகளை போற்றும் விதமாகவும், சாதியவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும் உத்தரகாண்ட் அரசு வந்தனாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமித்து கௌரவித்துள்ளது.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…