ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் “ஹிஸ்புல் முஜாகிதீன்” பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர், ரங்ரீத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, இன்று மாலை அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவர்கள் வருவதை அறிந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்த, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாகவும், ஒருவன் சரணடைந்ததாகவும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர் என்றும், மற்றவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ என்கவுண்டரில் கொல்லப்பட்ட பின்னர், அவரின் பொறுப்புகளை ஷைப்புல்லா ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…