வறுமையால் 8 மாத பெண் குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம்.!
கொரோனா வறுமையால் தவித்து வந்த மேற்கு வங்க தம்பதியினர் பெற்ற குழந்தையை ரூ .4,000 க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் தனது 8 மாத பெண் குழந்தையை பெற்றோர் வெறும் 4,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையிடம் இந்த தகவல் கிடைத்ததும் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா காரணத்தினால் குடும்பம் கடுமையான வறுமையை கையாண்டு வந்ததாகவும் வருமானம் இல்லாததால் குழந்தையை விற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், குழந்தையை மீட்டு அம்மாநில குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.