இந்தியாவில் நிதி பட்ஜெட் உருவான வரலாறு – சிறப்பு பார்வை !

Default Image

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வரவு மற்றும் செலவு விவரங்களை விரிவாக அறிக்கையாக தாக்கல் செய்வது பட்ஜெட் ஆகும். இந்தியாவில் பட்ஜெட் உருவான வரலாறு பற்றி இங்கு பார்ப்போம்.

பட்ஜெட் பெயர் விளக்கம்:
BOUGETTE என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்தும் BOWGETTE என்ற மத்திய ஆங்கில வார்த்தியில் இருந்தும் பெறப்பட்டதே இந்தியாவின் BUDGET என்ற வார்த்தையாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 112 ன் படி பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்படுகிறது.
முதல் பட்ஜெட் :
இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7 – 1860 ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினரால் தாக்கல் செய்யப்பட்டது.இந்திய கவுன்சில் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரால் இந்தியாவில் அங்கிலேய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட்டானது வடிவமைக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் :
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு முதல் பட்ஜெட் ஆனது அப்போதைய மத்திய நிதி அமைச்சர் RK சண்முகம் செட்டி என்பவரால் 1947ம் ஆண்டு நவம்பர் 26 ம் நாளில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் 7 மாதங்களுக்கான  வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நாடு பிரிக்கப்பட்ட பின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
பட்ஜெட் அல்வா :

நாட்டின் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்க வரும் அதிகாரிகளுக்கு அல்வா குடுக்கும் முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. பட்ஜெட் உருவாக்க காரணமாய் இருக்கும் அனைவரும் இனிப்பு உண்பர்.நாடாளுமன்ற நார்த் ப்ளாக் குடியிருப்பில் தயாராகும் பட்ஜெட்டில் அமைச்சர்கள்,அதிகாரிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் இருப்பர்.
ரகசியமாய் பட்ஜெட் :
நாட்டின் பட்ஜெட் தயாரிக்கப்படும் நிகழ்வானது மிக ரகசியமாய் கண்காணிக்கப்படும். எந்த தகவலும் வெளியில் கசியதா வகையில் பாதுகாக்கப்படும். பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகள் அனைவரும் 15 நாட்கள் அங்கயே தங்கி பட்ஜெட் தயாரிக்க ஏற்பாடுகள் நடக்கும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்