இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்துக்கள் கொண்டாடப்படும் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்தி தான். விநாயகர் பிறந்த ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும் இதற்கு அதிக வரவேற்பு ,மிகசிறப்பாக கொண்டாடப்படும் இடமாக மும்பை உள்ளது.அப்போது மராட்டிய பகுதி ஆண்ட சத்ரபதி சிவாஜி களத்தில் இவ்விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். இதனால் விநாயகர் சதுர்த்தி மராட்டிய பகுதிகளில் தேசிய விழாவாகவும் , கலாச்சார விழாவாகவும் இன்று அளவிலும் கொண்டாடப்படுகிறது.
சத்ரபதி சிவாஜி தொடர்ந்து பீஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் விநாயகர் சதுர்த்தி தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது.சுதந்திர போராட்ட காலத்தில் இந்து மதத்தில் மிகுந்த பற்று கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி எல்லை தாண்டி பரப்பினார்.
அப்போது ஆங்கிலேயர்கள் காலத்தில் மராட்டிய இந்துக்கள் மனதில் பிள்ளையார் மிகவும் ஆழமாக பதிந்து விட்டார்.அந்நிலையில் மராட்டிய பகுதியில் எலிகளால் நோய் அதிகரிக்க அந்த நோயால் பல மக்கள் இறந்தனர்.இதை அடுத்து ஆங்கிலேய அரசு உத்தரவை ஒன்றை பிறப்பித்தது.
எலியை பிடித்து வருபவர்களுக்கு பணம் தருவதாக ஆங்கில அரசு அறிவித்தது. உடனே பாலகங்காதர திலகர் எலி விநாயகரின் வாகனம் அதை அழிக்க ஆங்கிலேய ஆட்சி சதி செய்கிறது என போராட்டம் எழுப்பினார்.
பின்னர் மக்கள் பாலகங்காதர திலகர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக ஆங்கிலேய அரசு உத்தரவை வாபஸ் பெற்றது. இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றதால் பாலகங்காதர திலகருக்கு “லோகமான்ய” பட்டம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஆரம்பித்தனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பணக்காரன் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…