The idol was unveiled at the Ram Temple in Ayodhya during the pranpratishtha ceremony [file image]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதத்தை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தத்துடன் இன்று ராமர் கோயிலுக்கு வருகை தந்து விழாவில் பங்கேற்றுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலின் சிறப்புகள்… இரும்பு இல்லாமல் பிரமாண்ட கட்டுமானம்!
இன்று நண்பகல் சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால்தாஸ், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோயிலில் ராமர் சிலை நிறுவுதல் தொடர்பான சடங்குகளை பிரதமர் மோடி செய்தார்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது. மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பால ராமருக்கு முதல் பூஜையை பிரதமர் மோடி செய்தார். அதாவது, ராமர் சிலைக்கு முதலாவதாக பிரதமர் மோடி, பழங்கள் வைத்து படைத்து, தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த் படேல், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராம பகவானுக்கு, பிரதமர் மோடி தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…