பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கடந்த 2008-ம் ஆண்டு பிரியா எனும் பல் மருத்துவரை மணமுடித்தார். இந்த நிலையில் சச்சின் பன்சால், தன்னை அடிப்பதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, பிரியா தரப்பில் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திருமணத்தின் போது சச்சின் பன்சாலுக்கு தனது தந்தை ரூ.50 லட்சம் வரதட்சணையாக அளித்ததாகவும், பின்னர் கூடுதலாக ரூ.11 லட்ச கொடுத்ததாகவும், அவரது மனைவி பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பெயரிலுள்ள சொத்துகளையும் சச்சின் அவரது பெயருக்கு மாற்றிதரக்கோரி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவரது குடும்பத்தினரும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ள பிரியா, டெல்லியிலுள்ள தனது சகோதரிக்கும் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். சச்சின் பன்சால், அவரது தந்தை சத்ப்ரகாஷ் அகர்வால், தாய் கிரண் பன்சால், சகோதரர் நிதின் பன்சால் ஆகியோர் மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரதட்சணை தடைச் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் சச்சின் பன்சால் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சச்சின் பன்சால் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…