எஸ்.பி.பி மறைந்தாலும் அவரது குரல் வாழும் – ராகுல் காந்தி இரங்கல்.!
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று 1.04 மணிக்கு காலமானார் என்று அவரது மகன் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.பி.பி மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திரு எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது பாடல்கள் பல மொழிகளில் மில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்டுள்ளது என்றும் அவர் மறைந்தாலும் அவரது குரல் வாழும் எனவும் தெரிவித்துள்ளார்.
My heartfelt condolences to the bereaved family and friends of Mr S. P. Balasubrahmanyam. His songs touched millions of hearts in many languages. His voice will live on.#RIPSPB
— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2020