மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!

இந்து அமைப்புகள் காவி கொடிகளை ஏந்தியபடி மசூதி மேல் ஏறி காவி கொடி காட்டியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

UttarPradesh - Mosque

உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இந்து அமைப்புகள் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜ் பகுதியில் பேரணியாகச் சென்ற இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திடீரென சையத் சலார் காசி தர்காவில் ஏறி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷங்களை எழுப்பி அங்கு கொடிகளை அசைக்க, கீழே நின்றிருந்தவர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பி கோஷமிட்டனர்.

இவர்கள் எப்போது திருந்துவார்கள் என நெட்டிசன்கள் கேட்கின்றனர். மேலும், தர்கா மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தர்காவில் இருந்து வெளியேற்றினர். இது தொடர்பாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதாகவும் காவல்துறை  உறுதி கூறியது.

முன்னதா,  மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்திலும், இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி பதிவாகியுள்ளது. சங்க பரிவார் ஆர்வலர்கள் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவிற்கு வருகை தந்து, பச்சைக் கொடியை அகற்றிவிட்டு, காவி கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்புப் படையினரை குவித்தனர். ஆனால் இதுவரை, இந்த சம்பவம் அல்லது கல் வீச்சு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்