கொரோனா தடுப்பு பணிக்கு நிதியுதவி அளிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து,விளையாட்டு, சினிமா, பிரபலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தனது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ .20 கோடியை பிரதமர் நிதிக்கு அளித்துள்ளது. இது தவிர, எச்ஏஎல் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை ரூ. 6.25 கோடியும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக இது ரூ. 26.25 கோடி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கொரோனா தடுப்பு பணிக்கு வழங்கியுள்ளது.