கடந்த ஆண்டு டிசம்பர் 17-19 வரை ஹரித்வாரில் ஒரு தர்ம சன்சத் நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுகள், கருத்துக்களை வெளியிட்டதற்காக தஸ்னா தேவி கோவில் பூசாரி யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து,டெல்லி புராரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பேசிய யதி நரசிங்கானந்த்,முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்று கூறினார்.குறிப்பாக,இந்துக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தி போராடும்படி நரசிங்கானந்த் கேட்டுக் கொண்டார்.இதனால்,அவர்மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில்,சர்ச்சைக்குரிய பாதிரியார் யதி நரசிங்கானந் மீண்டும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.அதன்படி,இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தடுக்க அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு இந்துக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இந்தியா ஜனநாயக நாடு என்றும்,ஆனால் முஸ்லிம்கள் திட்டமிட்ட முறையில் பல குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் இந்துக்கள் மக்கள்தொகையை விட அதிகரித்து வருகின்றனர்.
இதனால்,முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் அண்டை நாடான பாகிஸ்தானைப் போல இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாற்றப்படும் அதனால்தான், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு இந்துக்களிடம் எங்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது,” என்று நரசிங்கானந்த் கூறியுள்ளார்.
ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் ஜாமீனில் இருக்கும் பாதிரியார், ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் மதுராவில் நடைபெற்ற ஒரு நிக்ழ்ச்சியில், இந்துக்கள் குறைவாக உள்ள நாடாக இந்தியா மாறுவதைத் தடுக்க அதிக குழந்தைகளை உருவாக்குமாறு இந்துக்களை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…