இந்துக்களே உங்கள் கத்திகளை கூர்மையாக வைத்திருங்கள்.. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு.!
உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திளையாவது கூர்மையாக வைத்திருங்கள். – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்.
மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதி எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அண்மையில் லவ் ஜிஹாத் பற்றி தனது பதிவை இட்டுள்ளார். அதில், அவர்களுக்கு லவ் ஜிஹாத் எனும் பாரம்பரியம் இருக்கிறது. அவர்கள் அதனை நேசிக்கிறார்கள். நாமும் இந்து கடவுளை நேசிக்கிறோம். ஒரு சன்யாசி துறவி தனது கடவுளை நேசிக்கிறார். எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகில் அடக்குமுறைகள், பாவங்கள் அனைத்தையும் ஒழித்துவிடுங்கள் என்று துறவிகள் கூறுகின்றனர். அப்படிஸ் செய்யவில்லை என்றால் காதலின் உண்மையான விளக்கம் இங்கு நிலைக்காது. எனவே லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதே வழியில் பதில் கொடுங்கள். என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். எதுவுமில்லை என்றால் குறைந்தபட்சத்தில் காய்கறிகளை வெட்டும் கத்திகளாவது கூர்மையாக வைத்திருங்கள். எங்களைத் தாக்குகிறார்கள். தகுந்த பதிலடி கொடுப்பது நம் உரிமை. எனவும் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர்.