ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி!
உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி, 7 நாட்களில் இந்துக்கள் பூஜைகளை தொடங்கலாம் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் உள்ள கீழ்தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஞானவாபி மசூதி, இந்து கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதா? என்று சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக இந்து பெண்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பின், நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மசூதியில் சிவலிங்கம் போன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட தரமாட்டேன் – மம்தா பானர்ஜி..!
இதையடுத்து, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சீல் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதனால், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு வாரணாசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அண்மையில் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதியில் இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை வாரணாசி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் உள்ள கீழ்தளத்தில் (சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்) இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என்றும் இதற்காக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.