டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் .
நேற்று முன்தினம் பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகமூடி கட்டிக் கொண்டு வந்த சிலர் கடுமையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு தாக்கினர்.இந்த தாக்குதலில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஸ் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைந்தது.இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியது.அந்த முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் இரவு 9 மணி வரை இருந்தனர்.அவர்கள் கையில் ஹாக்கி மட்டை ,இரும்பு கம்பி செங்கல்களை கொண்டு கண்ணில் படும் பொருட்கள் அடித்து விடுதியை சூறையாடினர்.இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் காயமைடந்த 28-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜே.என்.யு பல்கலை கழகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .
இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இது குறித்து இந்து ரக்ஷா தலைவர் பிங்கி சவுத்ரி வெளியிட்ட வீடியோ பதிவில், தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது. தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் .
மற்ற பல்கலைக்கழகங்களில் தேச விரோத செயல்கள் நடைபெற்றால் தாக்குதல் நடத்துவோம். என்று தெரிவித்துள்ளார் .இதனால் பிங்கி சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பிங்கி சவுத்ரியிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…